Sunday, April 18, 2010

எந்த பிரச்சனை முக்கியமான பிரச்சனை


எதை பற்றி எழுதுவேன்

காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் பேஸ்ட்டு முதல் இரவு படுக்கும் போது
பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லாமே பன்நாட்டு கம்பெனிகளுடையது என்பதை
உணர்த்தும் வகையில் எழுதவா? இல்லை இருக்க இடமில்லாமல் தெரு ஒடங்களில்
படுத்து அதிகாலையில் நவீன கழிவு கட்டிடத்தை பயன்படுத்தும் இவர்களைப்
பற்றி எழுதவா? இல்லை தினமும் பேப்பரில் தற்கொலை முதல் கொலைவரை நடைபெறும்
நிகழ்வுகளைப் பற்றி எழுதவா? இல்லை இரவு 12மணிக்கு டீ கடையை மூடவிட்டு
காலை 4 மணிக்கு திறந்து டீ கடைகாரரை பற்றி எழுதவா? இல்லை அதிகாலையிலே
கோயம்பெடு சென்று காய்கறிகளை வாங்கி விற்கும் காய்கறிகாரர்களை பற்றி
எழுதுவதா? இல்லை இவர்கள் வாழ்வில் மண்னை போடும் ரிலையன்ஸ் பிரயிஸ்
நிறுவனத்தை பற்றி எழுதவா? இல்லை இந்த நிறுவனத்தையே வருங்காலத்தில்
முழ்கடிக்கப் போகும் வால்மார்ட் நிறுவனத்தை பற்றி எழுதவா? இல்லை சுற்று
சூழலை கேடுக்கும் இந்த போக்குவரத்து மற்றும் நேரிசல்களைப் பற்றி எழுதவா?

இல்லை ஒரு இடத்திற்கு சுலபமாக செல்ல வேண்டும் என்று பயன்படுத்த கூடிய
வாக¬த்தை போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்களே இவர்களை
பற்றி எழுதவா? இல்லை உச்சி வெயிலில் சிக்னல் என்று போட்டு வண்டியில்
செல்பவர்களை எரிச்சலின் உச்சத்திற்குக் சொல்லும் அவல நிலையை பற்றி
எழுதவா? இல்லை போக்குவரத்து சாலைகளில் குண்டுகுழியாக போட்டவர்களை பற்றி
எழுதவா? இல்லை பாதாளச்சக்கடையை மனிதன் அள்ள கூடாது என்று
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இன்றும் மனிதன் இறங்கி அள்ளும் நிலையை
பற்றி எழுதவா?

நாட்டில் வருமைக்கொட்டிற்கு கீழ் வாழும் மக்கள்
முன்னெருவதற்கு எந்த வித முயற்சியும் செய்யமால் மேல்தட்டு மக்கள்
செல்வதற்கு வசதியாக அமைக்கும் புதிய புதிய பாலங்களைப் பற்றி எழுதவா?
இல்லை இதனை கான்ரெக் எடுத்த கான்ரெக்டர் மற்றும் டேன்டர் விட்ட அதிகாரி
முதல் அரசியல்வாதி வரை ஊழல் செய்பவர்களை பற்றி எழுதவா? இல்லை பாலத்தின்
கீழ் ஒடும் கூவம் நிதியில் துணித் துவைத்து விளையாடிக்கொண்டிருக்கும்
சிறுவர்களைப் பற்றி எழுதவா? இல்லை தினமும் வீதி வீதியாக குப்பை அள்ளி
அன்றாடும் பிளைப்பை நடத்தும் குப்பைகாரர்களை பற்றி எழுதவா? இல்லை கண்கள்
இரண்டும் இல்லாமல் பாட்டுப்பாடி கவுராக பிச்சை எடுக்கும் கண்
தெரியதாவர்கள் பற்றி எழுதவா? இல்லை நாம் நாட்டில் பிறந்த பாவத்திற்காக
பிறந்தவுடன் அதற்கே தெரியமால் பிச்சை எடுக்கும் கைகுழந்தை முதல் பச்ச
இளம் குழந்தைகளை பற்றி எழுதவா? இல்லை சென்னையில் சுற்று சூழல் தூய்மையை
கேடுக்கும் வகையில் நேறுக்கி நேறுக்கி வீடு கட்டி அதிக வாடகைக்கு
விடுபவர்களை பற்றி எழுதவா? இல்லை கல் உடைப்பவர்கள், கட்டிட வேலை, பட்டரை,
செருப்பு வேலை, உழவர்கள், சிறுகடை வியாபாரிகள் என உழைப்பை மூலதனமாக
வைத்து தொழில் புரியும் இவர்கள்.

வாழ்நாள் கடைசிவரை அப்படியே
இருக்கிறார்களே, ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எழுதவா? இல்லை
பிரோக்கர் வேலையை ஆன்லென் என்று சொல்லி பெரிய அளவில் ஏமாற்றி பிழைக்கும்
இவர்களை பற்றி எழுதவா? இல்லை பொதுநலத்துடன் உள்ளவர்கள் தங்கள்
வாழ்க்கையை எப்படி கொண்டுச் சென்றார்கள் என்பதைப் பற்றி எழுதவா?, இல்லை
சுயநலத்துடன் இருந்து தான் தன் வீடு, தன் குடும்பம், என்று
பொருளாதாரத்தில் தங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு மற்றவர்கள் வாய்ப்பை
பரிக்கும் இவர்களை பற்றி எழுதவா? இல்லை இந்த உலகத்தில் அடிமைச்
சமூகத்தில் எப்படி ஆண்களும் பெண்களும் கொத்தடிமைகளாக இருந்தார்கள் என்ற
கண்ணிர் கதையை எழுதவா? இல்லை இன்று மாடன் என்ற பெயரில் மேல் நாட்டு
கலச்சாரத்தை புகுத்துபவரைப்பற்றி எழுதவா? இல்லை இன்று வரை தங்கள்
நாகரிகத்தை மாற்றிக்கொள்ளமால் அப்படியே உள்ள குறிவிக்காரர்கள் பற்றி
எழுதவா? இல்லை ஏற்கனவே தனியார் பல்கலைகழகங்கள் அவரவருகேற்ப வகையில்
கட்டணக் கொள்ளையடிக்கும் போது இப்போது வெளிநாட்டு பல்கலைக்கழகம்
இந்தியாவில் அமைத்து ஏழைமக்களின் வாழ்க்கையை கீழுக்குத்தள்ளும் இந்த
முதலாளித்துவ சமுகத்தை பற்றி எழுதவா? அன்று பழமைவாதத்தால் மக்களை
கல்வியிலிருந்து விலக்கியது, இன்று அதிககட்டண கொள்ளையால் கல்வியை
எட்டக்கணியாக மாற்றியுள்ளதைப் பற்றி எழுதவா?

ஐயோ நான் வாழும் சமூகத்தில்
இவ்வளவு பிரச்சனைகளின் எந்த பிரச்சனை முக்கியமான பிரச்சனையேன்று
முன்னிலைப்படுத்தி எழுதுவேன்